இடதுசாரி கட்சிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளனர்.
லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிச கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
மேலும் ஜனாதிபதிக்கு ஆதரவு அளிப்பது குறித்து தமது கட்சியில் ஏற்பட்ட சில முரண்பாடுகள் தொடர்பில் இடதுசாரி கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

0 Comments