அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஊடக துணைச்செயலாளர் எரிக் சூல்ட்ஸ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “(ஆப்கான்) தலீபான்கள் ஆயுதம் ஏந்திய போராளிகள். ஆனால் ஐ.எஸ். இயக்கத்தினர், தீவிரவாதிகள். எனவே நாங்கள் தீவிரவாத கும்பல்களுக்கு சலுகைகள் வழங்க மாட்டோம்” என கூறினார்.
இதைக் கேட்ட நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தவர்களாக, “என்ன, தலீபான்கள் தீவிரவாதிகள் இல்லையா?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “நான் தலீபான்களை அப்படி கருதவில்லை. தலீபான்கள், ஆயுதம் ஏந்திய போராளிகள்” என தான் கூறியதை உறுதிப்படுத்தினார்.
ஆனால் அதே அமெரிக்கா, ஆப்கான் தலீபான்களின் தலைவர் முல்லா உமர் தலைக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.61 கோடி) விலை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முல்லா உமரை உயிரோடு பிடிக்க சரியான தகவல் தருவோருக்கு இந்த தொகையை அமெரிக்கா பரிசாக வழங்கும்.

0 Comments