Ticker

6/recent/ticker-posts

நீதியரசரை அசாத் ஸாலி அச்சுறுத்தினாராம் ! - பொலிஸார் விசாரணை

பிரதம நீதியரசரின் வீட்டில் நேற்றிரவு அனுமதியின்றி நுழைந்து, நீதிபதியை பதவி விலகுமாறு வற்புறுத்திய சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி உட்பட குழுவொன்று குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கருவாத்தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 7 இல், விஜேராம பாதையில் அமைந்துள்ள நீதியரசரின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்துக்கு சென்று இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். இது தொடர்பில் நீதியரசரின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சிங்கள் ஊடகமொன்று அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments