இலங்கையின் 45 வது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகிவருகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பிரதம நீதியரசராக இருந்த சிராணி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக பதவி விலக்கப்பட்டிருந்த நிலையில் புதிய பிரதம நீதியரசராக மொஹான் பிரீஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸை பதவி விலகுமாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றது. இன்று சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக மீண்டும் பதவி ஏற்றுள்ள நிலையில் நாளை அவர் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறவுள்ளார்.
இந்த நிலையில் வெற்றிடமாகும் பிரதம நீதியரசர் பதவிக்கு உயர்நீதிமன்ற நீதியரசர் நியமிக்கப்படலாம் என்ற ஊகம் சட்டத்தரணிகள் வட்டாரத்தில் நிலவுகின்றது.
ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். இந்த நிலையில் மூப்பு மற்றும் தகைமை அடிப்படையில் இவர் இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக நியமிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments