Ticker

6/recent/ticker-posts

பஷிலுக்கு சொந்தமான சொகுசு வாகனம் சிக்கியது!

டுல்சீமை கொக்காக்கலை தோட்டத்தின் குடியிருப்புப் பிரதேசத்தில் இருந்து சிவப்பு நிற கெப்ரக சொகுசு வாகனம் ஒன்றை மடுல்சீமை பொலிஸார் இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் மீட்டுள்ளனர்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவுக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியே மேற்படி வாகனம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ள மடுல்சீமை பொலிஸார் வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரையும் மேற்படி வாகனத்தை கொண்டு வந்தவர் என்ற பேரில் பிட்டமாறுவ ரோபேரியைச் சேர்ந்த ஒருவருமாக இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments