Ticker

6/recent/ticker-posts

மைத்திரி பெப்ரவரியில் இந்தியா செல்வார்; மார்சில் மோடி வருவார்

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று திங்கட்கிழமை பிற்பகல், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், இருதரப்பு உறவு  குறித்து பேசப்பட்டதாகவும் இலங்கைக்கு வருமாறு மோடிக்கு சமரவீர அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்திய பிரதமர் மோடி, இலங்கைக்கு முதல் முறையாக விஜயம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அடுத்த மாதத்தில் இந்தியா செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments