Ticker

6/recent/ticker-posts

சிாிகொத்தா தாக்குதல் விவகாரம் - வசந்த பண்டார பிணையில் விடுதலை

சிறிகொத்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் வசந்த பண்டார, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தில் கொழும்பு சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐ.தே.க காரியாலயத்திற்கு முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, கட்சி
அலுவலகம் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் நேற்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, வசந்த பண்டார தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும், 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments