Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் இயற்கை முறையில் பயோ டீசல் உற்பத்தி

ந்தியாவில் இயற்கை முறையில் பயோ டீசல் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை முன்னெடுக்கும் யோசனை உள்ளதாக மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருக்கழுக்குன்றத்தில் இயங்கி வரும் தனியார் பயோ டீசல் தொழிற்சாலையை நேற்று பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரத்தில் பயோ டீசல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயற்பட்டுவருகின்றன. நாள் ஒன்றுக்கு விசாகப்பட்டினத்தில 1,500 தொன்னும், காஞ்சிபுரத்தில் 100 தொன் வீதமும் பயோ டீசல் தயாரிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காகவும், சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காகவும் பயோ டீசல் உற்பத்தியை முன்னெடுப்பது தொடர்பில் தமது தனிப்பட்ட ஆர்வத்தில் குறித்த தொழிற்சாலையை பார்வையிட்டதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
‘இந்தியாவில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரூ. 6 லட்சம் கோடி செலவிடப்படுகின்றது. ஆனால், டொலரின் மதிப்பு மாறுபடுவதால் கூடுதல் செலவு ஏற்படுகின்றது. எனவே, இந்தியாவில் இயற்கை முறையில் பயோ டீசல் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கம் உள்ளது’ என மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments