பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சஜின்வாஸ் குணவர்தன வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தராக கருதப்பட்ட சஜின்வாஸ் குணவர்தன பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments