சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் கோத்தபாய தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தார்.
லசந்த உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரின் கொலைகளுடன் கோதாபயவிற்கு தொடர்பு இருப்பதாக மேர்வின் சில்வா ஊடகங்களுக்கும் அறிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் மேர்வின் சில்வா, ஆவணங்களுடன் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் விரைவில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.
லசந்த கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கருத்து குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லசந்த கொலையுண்ட தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தெங்குப்பொருள் ஏற்றுமதியாளர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்ததாகவும் அப்போது ஜனாதிபதிக்கு வந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்து சற்று அமைதியாக இருந்தார் எனவும் தலைக்கு பட்டுவிட்டதா என வினவியதாகவும் லசந்தவின் மனைவி சொனாலி சமரசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments