Ticker

6/recent/ticker-posts

பிரதம நீதியரசருக்கு பேச்சாளர் இருப்பதை அறிந்திருக்கவில்லை: அமைச்சர் ராஜித

பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸூக்கு ஊடக பேச்சாளர் ஒருவர் இருப்பதை தான் அறிந்திருக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் ராஜித நேற்று தெரிவித்திருந்ததுடன் பிரதம நீதியரசரின் பேச்சாளர் சட்டத்தரணி விஜேரத்ன கொடிப்பிலி அதனை நிராகரித்திருந்தார்.
பிரதம நீதியரசர் தொடர்பான இந்த விடயத்தில் உண்மை, பொய் என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
அங்கு தொடர்ந்தும் பேசி
ய அமைச்சர்,
பிரதமர் என்னிடம் கூறியதையோ நான் உங்களுக்கு தெரிவித்தேன். இது குறித்து மேலதிக விபரங்கள் பிரதமருக்கே தெரியும்.
எவ்வாறாயினும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டுள்ளார்.
பதவி விலகல் தொடர்பாக பேசி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக அவர் அந்த சந்தர்ப்பத்தை கோரியிருக்கலாம் என நம்புகிறேன்.
அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கையாண்டு வந்த வங்கி கணக்குகள் சம்பந்தமாக தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
செயலாளர் ஒருவர் அமைச்சின் பெயரில் கூட வங்கி கணக்குகளை வைத்திருக்க முடியாது.
இருந்தாலும் விடயங்களை சரியானதை அறியாது அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு வருவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இதனால், அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடும் போது நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments