Ticker

6/recent/ticker-posts

நாமலின் நடமாடும் சொகுசு மாளிகை !




நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக நம்பப்படும் உல்லாச விடுதி போன்ற வசதிகளுடன் கூடிய பஸ் வண்டியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் வாகன தாிப்பிடத்தில் விட்டு விட்டு தப்பி செல்ல முயன்ற ஒருவரை  பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாாித்ததில் இந்த சொகுசு வாகனம் கடந்த காலங்களில் நாமல் ராஜபக்ஷவினால் பயன் பட்டு வந்திருப்பதாக அறிய வந்திருக்கிறது.

கடந்த வருடம் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவா்கள் பங்குபற்றிய மாநாட்டுக்கு  வாடகை அடிப்படையில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இந்த சொகுசு வாகனங்களுக்கு வெளிவிவகார அமைச்சு இதற்கான  வாடகையாக பல லட்சம் ரூபாய்களை செலுத்தி வந்திருப்பதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments