Ticker

6/recent/ticker-posts

ஓட்டமாவடியில் அமீர் அலிக்கு வரவேற்பு

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் முதன் முறையாக தனது பிரதேசத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு அவரை வரவேற்கும் நிகழ்வும் பொதுக் கூட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை (30.01.2015) பிற்பகல் ஓட்டமாவடியில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் இடம் பெற்ற கூட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை வாணிப அமைச்சருமான றிஸாட் பதியுதீன், கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments