Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த சீனா எத்தகைய உதவிகளையும் வழங்கும் - பதில் சீனத் தூதுவர் ஹுவெய்

இலங்கையின் கொரோனா வைரஸ் நிலைமையைக் கட்டுப்படுத்த தமது முழுமையாக  ஆதரவை அளிப்பதற்கு தயாராக இருப்பதாக  சீனா தெரிவித்துள்ளது.

நேற்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் சுகாதார  அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் இலங்கைக்கான  பதில்  சீனத் தூதுவர் ஹுவெய் ஆகியோருக்கு இடையே ஒரு விசேட  கலந்துரையாடல் இடம்பெற்றது.

COVID-19 க்கு எதிராக போராட தேவையான நிதி உதவி, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள்  வழங்குவதற்கு தயாராக இருப்பதாக  பதில் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

தனது கடமையை முடிந்தவரை சிறப்பாகச் செய்ய முயற்சிக்கும்  அமைச்சர் வன்னியராச்சிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

COVID-19 ஐ கட்டுப்படுத்த கடந்த மூன்று மாதங்களில் சீனா எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் அவர் சுகாதார அமைச்சரிடம்  கையளித்தார்.

Post a Comment

0 Comments