Ticker

6/recent/ticker-posts

வுஹானில் கொரோனாவை பரப்பியது அமெரிக்க இராணுவமே! அதிர்ச்சித் தகவல்!

அமெரிக்க இராணுவமே  கொரோனா வைரஸை மத்திய நகரமான வுஹானுக்கு கொண்டு வந்து பரவ விட்டதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கனடாவை தளமாகக் கொண்டு செயற்படும் ஒரு இணையதளம் வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சித் தகவலை உலகறிய பரவச் செய்யுமாறு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தனது ட்விட்டர் பின் தொடர்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று (13)வெள்ளிக்கிழமை காலை சாவோ லிஜியன் தனது  இரண்டு ட்வீட்களில் இந்த கோரிக்கையை முன் வைத்துளளார். சாவோ லிஜியனின் டிவிட்டர் கணக்கை 287,000 க்கும் மேற்பட்டோர் பின்தொடர்பவர்களாக இருக்கின்றனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் வுஹானில் இடம்பெற்ற  7 வது இராணுவ உலக விளையாட்டுப் போட்டிகளில்  அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 300 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டதையும்  சாவோ லிஜியன் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா வைரஸ் சீனாவின் அதிமுக்கிய நகரமான வுஹானிலிருந்தே உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மீதான சாவோ லிஜியனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு  பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர்   கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments