லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபட்டபெந்தி தமது பதவியை விட்டு விலகவுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளரான அவரை பதவி விலகுமாறு கோரி ஏற்கனவே அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
பாலபட்டபெந்தி, ஏற்கனவே உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த போது தீர்ப்புக்காக சாட்சிக்காரர் ஒருவரிடம் இருந்து கார் ஒன்றை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பதவியில் இருந்து அவர் விலகவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் முன்னைய அரசாங்கம் அதனை கருத்திற்கொள்ளவில்லை.
அதேநேரம் அவரது காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போது அவற்றின் விசாரணைகளை பாலபட்டபெந்தி காலந்தாமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments