Ticker

6/recent/ticker-posts

பொய் வாஹினியாக மாற்றம் பெற்ற ரூபவாஹினிக்கு எச்சாிக்கை!

பொதுமக்களின் வாிப்பணத்தில் இயங்கும் அரக ஊடகங்கள்  கடந்த காலங்களில் தோ்தல் சட்டங்களை அப்பட்டமாக மீறி மஹிந்தவிற்கு ஆதரவாக பிரசாரத்தை புாிந்து வந்தது.

இன்று ரூபவாஹினியால் அதே பாணியிலான ஒரு வேலை
அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஐ.தே.க வின் சஜித் பிரேமதாஸ மஹிந்தவுக்கு ஆதரிப்பதற்காக  கட்சி மாறியிருப்பதாக அது செய்தி வெளியிட்டு இப்போது சிக்கலில் மாட்டியிருக்கிறது.

தோ்தல் ஆணையாளரின் கடுமையான எச்சாிக்கைக்குப் பின்னா் அந்த செய்திக்காக ரூபவாஹினி மன்னிப்புக் கேட்டுள்ளது. இத்தகைய செயல்கள் இனிமேலும் தொடா்ந்தால் ரூபவாஹினி சேவை நிறுத்தப்படும் என்றும் தோ்தல் ஆணையாளா் எச்சாிக்கையும் விட்டிருக்கிறாா்.

இறுதி நேரத்திலாவது தோ்தல் ஆணையாளருக்கு இப்படி உசாா் வந்ததற்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்  மகாஜனங்கள் நன்றியை தொிவிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments