Ticker

6/recent/ticker-posts

குமார் குணரட்னம் கைது செய்யப்படுவாரா?

முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தை மீண்டும் நாளைய தினம் குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜாகொட குறிப்பிட்டார்.
குமார் குணரட்னம் வேறு பெயரில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக கூறப்பட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பினார். கோத்தாபயவின் விஷேட அழைப்பின் போில் அவா் ஜே.வி.பி கட்சிக்கு எதிராக தோ்தல் பிரசாரம் செய்வதற்கு வரவழைக்கப்பட்டதாக குமார் குணரட்னம் மீது குற்றச் சாட்டு முன்வகை்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தனது விருப்பத்தின் போில் நாட்டுக்கு வந்த கட்சி தலைவர் ஒருவரை கைது செய்ய முயற்சிக்கப்படுவதற்கு எதிராக ஒன்றிணையுமாறு முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட ஏனைய அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments