Ticker

6/recent/ticker-posts

நிமல் சிறிபால டீ சில்வாவிற்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவிற்கு எதிராக விசேட சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரணில் ஜயசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (29) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.
விசேட சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரணில் ஜயசேன இதுபற்றித் தெரிவித்ததாவது;
நான் ராகமை வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில் டீ.எஸ்.எம். இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்ய அமைச்சர் வலியுறுத்துவதாக கதிர்வீச்சுப் பிரிவின் சத்திரசிகிச்சை வைத்தியர் என்னிடம் கூறினார். ராகம வைத்தியசாலைக்கு டீ.எஸ்.எம். இயந்திரம் ஒன்று தேவை இல்லை. ஆகவே, அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்றை ஸ்தாபித்துத் தருமாறு அமைச்சரிடம் கேட்குமாறு நான் கூறினேன். இதனைக் கூறியதனால் குறித்த வைத்தியரைக் கடுமையாக அமைச்சர் சாடினார். அத்துடன், பலவந்தமாக அந்த இயந்திரத்தை வைத்தியசாலையின் சுவர்களை உடைத்து உள்ளேகொண்டு வந்தனர். இதன் போது இங்கே பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக நோயளிகளுக்குத் தேவையான மருந்துகளைக்கூட கொண்டு வருவதற்கு நிதி இல்லாமல் போனது. தரம் குறைந்த மருந்துகளையே மக்களுக்கு விநியோகிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று தெரியவில்லை.
என்றார்.

Post a Comment

0 Comments