Ticker

6/recent/ticker-posts

ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற கல்குடாவிற்கு குடிநீர் வழங்குவது குறித்த உயர்மட்ட மாநாடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்திற்கு குடிநீர் வழங்குவது தொடர்பான உயர் மட்ட மாநாடு நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சந்திப்பின்போது கல்குடா பிரதேசத்திற்கு குடிநீர் வழங்குவது, காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மலக்கழிவுகளை கடலுக்கும் அனுப்பும் திட்டமான சூவலஸ் எனும் திட்டம் மற்றும் குளங்களின் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில், த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ரா.நெடுஞ்செழியன், அமைச்சர் றவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகள், நீர்ப்பானச திணைக்களத்தின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments