Ticker

6/recent/ticker-posts

ஓடு­பா­தையை விட்டு வில­கிச்­சென்ற எயார் ஏசியா : 153 பய­ணி­களும் அவ­ச­ர­கால வாயிலால் வெளி­யேற்றம்

பிலிப்­பைன்ஸில் 153 பய­ணி­க­ளுடன் செவ்­வாய்க்­கி­ழமை மாலை தரை­யி­றங்­கிய எயார் ஏசியா விமா­ன­மொன்று ஓடு­பா­தை யை விட்டு விலகிச் சென்­றதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.
தலை­நகர் மணி­லா­லி­ருந்து அக்லன் மாகா­ணத்­தி­லுள்ள கலிபோ விமான நிலை­யத்தில் தரை­யி­றங்­கிய எயார்பஸ் ஏ320 -216 விமா­னமே இவ்­வாறு ஓடு­பா­தையை விட்டு விலகிச் சென்­றுள்­ளது.

இத­னை­ய­டுத்து பய­ணிகள் விமா­னத்தின் அவ­சர காலத்தில் பயன்­ப­டுத்­தப்­படும் வாயிலால் வெளி­யேற்­றப்­பட்­டனர்.
இந்த சம்­ப­வத்தில் எவரும் காய­ம­டை­ய­வில்லை. மேற்­படி இஸட் 2 - 272 விமானம் ஓடு­பா­தையிலிருந்து விலகிச் சென்­றதை எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் விமான சேவை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.
காணா­மல்­போன எயார் ஏசியா 8501 விமா ­னத்தின் சிதை­வு­களும் அதில் பயணித்­த வர்­க­ளது சட­லங்­களும் ஜாவா கடலில் கண்டு பிடிக்கப்பட்டதற்கு சில மணித்தியாலங்க ளிலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்று ள்ளது.

Post a Comment

0 Comments