இந்தியாவின் இனவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் பெண் சாமியார் பிராச்சி ஆர்யா என்பவர் இந்தியாவில் உள்ள 15 கோடி மக்களை மீண்டும் தமது தாய் மதமான இந்து மதத்திற்கு திருப்பப் போவதாக எச்சாிக்கை விடுத்துள்ளாா்.
இந்தியாவிலுள்ள கிருஸ்தவா்களையும், முஸ்லிம்களையும் மீண்டும் மதம் மாற்றம் செய்யும் “திரும்புதல்” (கர் வாப்சி) எனும் மறுமத மாற்றம் செய்யும் செயற்பாட்டை தொடவிருப்பதாக அவா் தெரிவித்துள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத அமைப்பின் சார்பில் அண்மையில் பழைய டில்லி நகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
இந்தியாவிலுள்ள கிறிஸ்தவா்களும், முஸ்லிம்களும் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதம் மாறியவா்கள், அவர்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். இத்திட் டம் சில இந்துத்துவ அமைப்புகளால் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்றழைப்பது தேவையற்றது என்று கூறிய அவா், நாட்டின் விடுதலைக்காக உண்மையாக தியாகம் செய்தவர்கள் மற்றவர்கள்தான் என்பதால் காந்தியை தேசத்தின் தந்தை என்று கூறுவது தேவையற்றதாகும். இந்திய விடுதலைக்கான புகழ் தவறுதலாக காந்திக்கு சென்றுள்ளது. வீர சவர்க் கார் மற்றும் பகத்சிங் ஆகியோருக்குத்தான் அந்த புகழ் சென்றிருக்க வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளார்.
0 Comments