மகா சிவராத்திரி தினத்தை வர்த்தக விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை இந்துமா மன்றம், மீள்குடியேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தொடர்பிலான தமது கோரிக்கை கடிதத்தை நேற்று புதன்கிழமை (11) அனுப்பி வைத்துள்ளது
சிவராத்திரியானது இந்துக்களின் மிக முக்கிய மத தினமாக உள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து இந்துக்களாலும் அனைத்து இந்து ஆலயங்களிலும் இது அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த தினம் பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிவராத்திரி தினமான எதிர்வரும் 17ஆம் திகதியை வர்த்தக விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது,
0 Comments