Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் 3 முஸ்லிம் மாணவ, மாணவிகள் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள சேப்பல் கில் பகுதியில் சிரியாவை சேர்ந்த 3 பேர் சுட்டு கொலை செய்யபட்டனர்.

சிரியாவை சேர்ந்த பரகத்( வயது 23) அவரது மனைவி யுசோர் மொகமத் (21),அவரது தங்கை ரசன் அபு சல்கா மொகமத்( வயது 19) இவர்கள் 3 பேரும் தெற்கு கரோலினா பகுதி சேப்பல் ஹில் பகுதியில் உள்ள பலகலைக்கழகம் அருகே உள்ள கட்டிடத்தில் தங்கி இருந்தனர்.பரகத் கரோலினா பல்கலைகழகத்தில் பல் மருத்துவபடிப்பு படித்து வருகிறார்.இவர் துருக்கியில் சிரிய அகதிகளுக்காக பல் மருத்துவ முகாம் நடத்தி உள்ளார். அவரது மனைவி யுசோர் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார். யுசோரின் தங்கை தெற்கு கரோலினாவும் பல்கலைகழகத்தில் படித்து வருகிறார்.

கடந்த 10-ந்தேதி நடைபெற்ற தக்குதலில் 3 பேரும் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் ஸ்டீபன் ஹக் (46) எனபவரை கைது செய்து உள்ளனர். முதல் கட்ட விசாரணையில் காரை பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஸ்டீபன் ஹக் என்பவர் சுட்டு கொல்லப்பட்டிஉள்ளனர். 5 முதல் 10 துப்பாக்கி சூடு நடந்து உள்ளது.

Post a Comment

0 Comments