‘போர்ட் சிட்டி’ (கொழும்பு துறைமுக நகரம்) திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுற்றாடல் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இத்திட்டம் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சுற்றாடல் மற்றும் சுகாதார அவதானிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவிந்திர காரியவசம் தெரிவித்தார்.
மேலும் திட்டத்தை கைவிடுமாறு கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் முதல் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments