Ticker

6/recent/ticker-posts

எகிப்தில் ஒரே நேரத்தில் 183 இஹ்வான்களுக்கு தூக்கு தண்டனை !


எகிப்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, 183 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த முஹம்மத் முர்சி கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து அவரது இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி கலவரத்தில் ஈடுபட்டது. அப்போது கலவரக்காரர்கள் கெய்ரோவில் உள்ள பொலீஸ் நிலையம் மீது நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 

இது தொடர்பாக 188 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2 பேர் இறந்ததால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 183 பேருக்கு மரண தண்டனை விதித்து கெய்ரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. 

Post a Comment

0 Comments