மஹிந்தவுடன் இணைந்து நாட்டை வெற்றி பெறச் செய்ய நீங்கள் தயாரா என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 18ம் திகதி விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினரால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.
எதிர்வரும் 18ம் திகதி நுகோகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் பிற்பகல் 3.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என்ற நோக்கில் இந்த கூட்டத்தொடர் முன்னெடுக்கப்பட உள்ளது.
0 Comments