Ticker

6/recent/ticker-posts

19ம் அரசியல் திருத்தம் மார்ச் மாதம் - பிரதமர்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையை நீக்கும் வகையிலான 19ம் அரசியல் திருத்தச் சட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தெமடகொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறினார்.


அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது.

எவ்வாறாயினும் இந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ள காலம் ஏப்ரல் மாதம் 23ம் திகதியுடன் நிறைவடைகிறது.

அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும். அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மீண்டும் மக்களிடம் சென்று அதற்கான தங்களுக்கு ஆணை கோரப்படும்.

அதேநேரம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் 19ம் திருத்தச் சட்டத்தை முன்வைப்பது தொடர்பில், கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அவ்வாறு இல்லாத பட்சத்தில், மக்களின் ஆணை கோரப்படும் என்றும் அவா் கூறினாா்.

Post a Comment

0 Comments