Ticker

6/recent/ticker-posts

ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்களுக்கு குறிவைத்துள்ள அமெரிக்கா

ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை கைபற்றிய ஐ.எஸ்.தீவிரவாதிகள் அதை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.இவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளு
க்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர். தற்போது எகிப்து, ஏமன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் லிபியாவிலும் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் காலூன்ற தொடங்கியுள்ளது எனவே, அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் களம் இறங்கியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீச்சு

ஐ.எஸ்.அமைப்பின் முக்கிய தலைவர்களைக் கொல்வதற்கு, அமெரிக்கா பட்டியல் ஒன்றைத் தயாரித்து வருகிறது. அந்தப் பட்டியலில் தற்போது 24 முக்கியத் தலைவர்கள் உள்ளனர். அவர்களில் முதலிடத்தில் ஐ.எஸ்.அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் தற்போது ரகசிய இடத்தில் பதுங்கியுள்ளார். அமெரிக்கா ஏற்கெனவே இப்படியொரு பட்டியலைத் தயாரித்திருந்தது. அதில் இடம் பெற்றிருந்தவர்களில் ரசாயன ஆயுத நிபுணர் உட்பட 12 பேரை அமெரிக்கா கொன்றுள்ளது. அந்தப் பட்டியலில் தற்போது புதிதாகச் சிலர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments