Ticker

6/recent/ticker-posts

எகிப்து கால்பந்து போட்டியில் வன்முறை 22 பேர் உயிரிழப்பு



எகிப்தில் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில் 22 பேர் உயிரிழந்தனர்.

எகிப்தின் வான் பாதுகாப்பு ஸ்டேடியத்தில் எகிப்திய பிரீமியர் லீக் போட்டியில் உள்ளூர் அணிகளான ஜமாலேக் மற்றும் இ.என்.பி.பி.ஐ. மோதின. 


கால்பந்து போட்டியினை காண்பதற்கு அதிகமான ரசிகர்கள் வந்தனர். ரசிகர்கள் சிலர் போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட் வாங்காமலே மைதானத்திற்கு உள்ளே செல்ல முயற்சித்தனர். டிக்கெட் பெறாமல் முயற்சி செய்தவர்கள் ஜமாலேக் அணியினர் ரசிகர்கள் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் வாங்காமல் மைதானத்திற்குள் நுழைய முயன்றவர்களை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தடுத்தி நிறுத்தினர். 

இதனையடுத்து கால்பந்து ரசிகர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது.

 மோதல் வன்முறையாக மாறியது. கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க முயற்சி செய்தனர். 


இதனால் அங்கு நெரிசலும் ஏற்பட்டது. வன்முறை சம்பவம் மற்றும் நெரிசலில் சிக்கி 22 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த பலர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

எகிப்தில் கால்பந்து போட்டியின் போது வன்முறைகள் வெடிப்பது இதுஒன்றும் புதியதுஅல்ல. கடந்த 2012-ம் ஆண்டும் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில் 70-க்கும் மேற்பட்டோர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments