Ticker

6/recent/ticker-posts

சதாம் உசேனை தூக்கிலிட்ட கயிறு ஒரு கோடி டொலர் !

ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேன் கடந்த 1979–ம் ஆண்டு முதல் 2003–ம் ஆண்டுவரை 24 ஆண்டுகள் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். கடந்த 2003–ம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.

பின்னர் பண்ணை வீட்டில் பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சதாம் உசேனை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. 3 ஆண்டு விசாரணைக்கு பிறகு 2006 டிசம்பர் 30–ந் திகதி அவர் தூக்கிலிடப்பட்டார்.

அவரது கழுத்தை இறுக்கிக் கொன்ற தூக்குக் கயிற்றை ஏலத்தில் விட லண்டனில் உள்ள ஒரு பிரபல நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு வெளியானதும் உலகின் பல நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க தொடங்கி விட்டனர்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு செல்வந்தரின் குடும்பம், குவைத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர், ஈரானை சேர்ந்த ஒரு மத அமைப்பு ஆகியவை இந்த தூக்குக் கயிற்றை வாங்கிவிட துடியாய் துடித்துக் கொண்டுள்ளது. இதனையடுத்து, இந்த கயிற்றுக்கான ஏலத்தொகை தற்போது 70 லட்சம் அமெரிக்க டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 43 கோடி ரூபாய்) எட்டியுள்ளது.

எனினும், ஏலம் முடிந்து விடவில்லை. தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போகும் போக்கைப் பார்த்தால் இந்த கயிறு ஒரு கோடி டொலர் வரை விலை போகலாம் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments