Ticker

6/recent/ticker-posts

சென்னை சர்வதேச குறும்பட விழா

உலக நாடுகளின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள குறும்படங்களை திரையிடும்  சென்னை  சர்வதேச குறும்பட விழா நேற்று ஆரம்பமானது. 25 நாடுகளைச் சேர்ந்த 190 குறும்படங்கள் சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச குறும்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உலக அளவில் நடைபெறும் 800 சர்வதேச குறும்பட விழாக்களில் இந்த
சென்னை சர்வதேச குறும்பட விழாவும் ஒன்றாகும். நேற்று ஆரம்பித்த இந்த விழா எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெறவுள்ளது. இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த சென்னை சர்வதேச குறும்பட விழா இம்முறை சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்று வருகின்றது.
சென்னையில் மட்டுமல்லாது இந்த குறும்படவிழாவினை கோயம்பத்தூர் உள்ளிட்ட  தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடத்த திட்டமிட்டிருப்பதாக சென்னை சர்வதேச குறும்பட விழாவின் ஒருங்கினைப்பாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments