இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று புத்தகயா
சென்றடைந்தார்.
சென்றடைந்தார்.
ஜனாதிபதி சிறிசேன 4 நாள் சுற்று பயணமாக இந்தியா சென்றுள்ளார். டெல்லியில் அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச்சுவார்தை நடத்திய பிறகு பீகாரில் உள்ள புத்த விகாரத்தில் வழிபாடு செய்வதற்காக டில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
புத்த கயா சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற வழிபாட்டு நிகழ்ச்சியிலும் அதிபர் சிறிசேன கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து இன்றிரவு அதிபர் சிறிசேன தனி விமானம் மூலமாக ரேணிகுண்டா வருகிறார்.
ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பலத்த பாதுகாப்புடன் திருப்பதிக்கு செல்லும் அவர், நாளை அதிகாலை 2. 30 மணிக்கு சுவாமி தரிசனம் செய்கிறார்.
இதனை முடித்து விட்டு மீண்டும் கார் மூலமாக ரேணிகுண்டா திரும்பும் சிறிசேன தனி விமானம் மூலமாக கொச்சி சென்று பின்னர் இலங்கை வருகிறார். சிறிசேனவின் வருகையையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் தங்கும் பங்களாவில் 24 மணி நேரமும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
.jpg)

0 Comments