Ticker

6/recent/ticker-posts

திஸ்ஸவை நீக்க ஐ.தே.க செயற்குழு தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தவிசாளராக மலிக் சமரவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார். தேவேளை, அமைச்சுக்களின் நாடாளுமன்ற ஆளணித் தலைவராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் சனத் இம்புல்முரே நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஐ.தே.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சியிலிருந்து நீக்க கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது
.
இதன்போது, பிரபல வர்த்தகரான மலிக் சமரவிக்கிரம, கட்சியின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்டார். இதேவேளை, சனத் இம்புல்முரேவின் நியமனத்தை பொது நிர்வாகம், மாகாணசபைகள், உள்ளூராட்சி விவகாரம் மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய வழங்கியுள்ளார்.
1999ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் சனத் இம்புல்முரெ, வேட்பாளராக களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments