Ticker

6/recent/ticker-posts

படங்கள் - டிரக்டர்கள் மூலம் போதை பொருள் கடத்திய வெலே சுதா!





போதைப் பொருள் கடத்த பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 26 டிரக்டர்கள் களனி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வெலே சுதா என்பவர் பாகிஸ்தானில் இருந்து கடத்தும் போதைப் பொருள் குறித்த டிரக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

பொலிஸ் போதைப் பொருள் பிரிவினர் இந்த டிரக்டர்கள் மீட்கப்பட்டுள்ளன. 

களனி - பியகம வீதி சிங்காரமுல்ல 6ம் கட்டை பகுதி களஞ்சியசாலை ஒன்றில் இருந்து இந்த டிரக்டர்கள் மீட்கப்பட்டுள்ளன. 

வெலே சுதா வழங்கிய தகவலின்படி பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் இந்த டிரக்டர்களை மீட்டுள்ளனர். 

டிரக்டர்களின் உதிரிபாகங்களை கழற்றி அதனுள் போதைப் பொருள் மறைத்து கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

பிரித்தானிய பிரஜை ஒருவர் கூலிக்கு இந்த களஞ்சியத்தை பெற்றுள்ளதுடன் அதனை இரண்டு பாகிஸ்தான் பிரஜைகள் பாதுகாத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments