இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
மனைவி மற்றும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளோடு காலை ராஜ்காட் சென்ற சிறிசேன, காந்தி சமாதியில், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார். பின்னர் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சென்ற சிறிசேனவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி சிறிசேனவுக்கு இராணுவ அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

0 Comments