பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தனது சிகப்பு சட்டையை விற்றுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் அவருக்கு சொந்தமில்லாத பிரதமர் பதவியை அவர் அனுபவித்து வருவதாகவும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ என்பது பெயரல்ல எனவும், அது நாடு எனவும், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடையவில்லை எனவும் வீரவன்ச கூறியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் பிரதமராக்கி புதிய ஆட்சி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் பிரிவினைவாதத்திற்கு உரமூட்டும் வகையில் செயற்படுவதாகவும் வடக்கில் காணிகளை விடுவித்து, பாதுகாப்பு சோதனை சாவடிகளை அகற்றி அதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

0 Comments