Ticker

6/recent/ticker-posts

இன்று முதல் மஹிந்தவை பிரதமராக்கும் போராட்டம் ஆரம்பம் - உதய கம்மன்பில

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஒரு நடவடிக்கையை நாளை முதல் முன்னெடுக்கவுள்ளதாக மேல் மாகாண சபையின் உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
இதற்காக மக்கள் பலமொன்றை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் அவர் சிங்கள ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் செயற்பாட்டை விளக்கும் பொதுக்கூட்டமொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு நுகேகொடையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, தினேஷ்குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் மேல் மாகாண உறுப்பினர் உதய கம்மம்பில ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மைத்திரியின் வெற்றியின் பின்னால், முன்னெடுக்கப்படும் பிரிவினைவாதிகளின் 100 நாள் வேலைத்திட்டத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதை நோக்காகக் கொண்டு இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments