Ticker

6/recent/ticker-posts

குமரன் பத்மநாதன் யார் என சட்டமா அதிபருக்கு தெரியாதாம்!

கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது ஆகையால் அவரை பற்றி கருத்து வெளியிட ஒரு வார கால அவகாசம் தேவை இப்படி கூறினார் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத்.
மேன்முறையீட்டு நீதி்மன்றில் குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத் கே.பி தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி தனக்கு தெரியாதெனவும் இதற்கான விளக்கத்தை அளிக்க தனக்கு கால அவகாசம் தேவையெனவும் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையிட்டு நீதிபதி விஜித் மல்லகொட, எதிர்வரும் 26ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
குறித்த மனு கடந்த 5ம் திகதி விசாரணைக்கு வந்தபோது குமரன் பத்மநாதனின் கடவுச்சீட்டை முடக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments