அண்மையில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியான வெலே சுதாவின் போதைப் பொருள் களஞ்சியசாலையொன்று, இன்று காலை பொலிஸாரால் சோதனையிடப்பட்டது.
களனி, பியகம வீதியில் அமைந்துள்ள போதைப்பொருள் களஞ்சியசாலையே பொலிஸாரால் சோதனையிடப்பட்டது.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக குறித்த களஞ்சியசாலையில் பெருந்தொகையான போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதா கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments