Ticker

6/recent/ticker-posts

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி அரசியலுக்கு வருகிறார்?


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி எதிர்வரும் 8 ம் திகதி தனது அரசியல்  பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமுக்தி கம்பஹா மாவட்டத்தில் தனது அரசியல்  பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து கம்பஹா மாவட்ட  மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வைபவம் 8 ம் திகதி நடைபெறவுள்ளது.  அதில் விமுக்தி கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த  வைபவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஏற்பாடு செய்துள்ளார்.  அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வைபவம் பண்டாரநாயக்க சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின், நிட்டம்புவ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Post a Comment

0 Comments