படம் - வெட் வரி மோசடியில் சம்பந்தப்பட்ட இறைவரித்திணைக்கள பிரதி ஆணையாளா் ஞானசிாி த சொய்சாவுக்கு 102 வருட கால சிறை தண்டனையும் 1200 கோடி தண்டமும் விதிக்கப்பட்டது.
சுமாா் 399 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக தேடப்பட்டுவந்த “வெட்“ வரிகுற்றவாளிகளில் இருவரை மலேசியாவில் வைத்து, அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமாா் 399 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக தேடப்பட்டுவந்த “வெட்“ வரிகுற்றவாளிகளில் இருவரை மலேசியாவில் வைத்து, அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட 14 நபா்களில் 6 போ் மட்டுமே வழக்கு விசாரணைகளில் சம்பந்தப் பட்ருந்தனா். ஏனையோா் தலைமறைவாகியே இருந்து வந்தனா்.
399 கோடி ரூபா வெட் வரிப்பணத்தை மோசடிசெய்த வழக்கில், நீதிமன்றத்தை புறக்கணித்துவந்த 08 பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏற்கனவே 20 வருடகால சிறைத்தண்டனையை விதித்திருந்தது.
அத்துடன், பிரதிவாதிகள் மோசடி செய்த பணத்தின் மூன்று மடங்கினை அபராதமாக செலுத்த வேண்டுமெனவும் நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்திருந்தாா்.
வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் நீதிமன்றத்தினை இவர்கள் புறக்கணித்து வந்ததுடன், 08 பிரதிவாதிகள் இன்றியே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றும் வந்தன.
நீதிமன்றத்திற்கு ஒழுங்காக சமூகமளித்த 06 பிரதிவாதிகளுக்கும் ஏற்கனவே சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களையடுத்தே இவர்கள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொஹம்மட் முர்சி ரசீட் மற்றும் மொஹம்மட் நஸ்மி நாகூர் அடிமை ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேநேரம், இம்மோசடியின் பிரதான சூத்திரதாரியான, தற்போது டுபாயில் வசிக்கும் கார்மின் குதுப்தீனைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நோக்கில் பொலிஸ் குழுவொன்று நேற்று மலேசியா பயணமாகியுள்ளது
0 Comments