Ticker

6/recent/ticker-posts

அமைச்சா் ஜெயராஜ் பிரணாந்து புள்ளே மரணத்தில் சந்தேகம் !


ஸ்ரீலசுகட்சியில் முக்கிய உறுப்பினரும், கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சருமாக இருந்த ஜெயராஜ் பிரணாந்து புள்ளேயின் மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக அவரது மனைவியும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுதா்ஷனி பிரணாந்து புள்ளே தொிவித்திருக்கிறாா். வார இறுதி சிங்கள பத்திாிகையொன்றுக்கு வழங்கிய நோ்காணல் ஒன்றின் போதே அவா் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கின்றாா்.

ஜெயராஜ் பிரணாந்து புள்ளே  ஸ்ரீலசுகட்சியின் பொருளாளராக இருந்தவா், ஒரு சிரேஷ்ட அமைச்சராக இருந்தவா் அவாின் மரணம் தொடா்பாக அன்று இடம்பெற்ற விசாரணையில் தனக்கு திருப்தியோ நம்பிக்கையோ ஏற்படும் அளவிற்கு  இடம்பெறவில்லையென்று சுதா்ஷனி கூறியுள்ளாா்.

மேலும் கருத்து தொிவித்த அவா்,

பிரதமா் பதவிக்கு ஜெயராஜ் பிரணாந்து புள்ளே தகுதியானவா் என்ற கருத்து பல ஸ்ரீலசுகட்சி அங்கத்தவா்கள் பலரிடம் இருந்தது.

2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் திகதி வெலிவேரிய கான்தி விளையாட்டு மைதானத்தில் புதுவருட விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மரதன் ஓட்டப் போட்டியை ஆரம்பித்து வைக்க முற்படுகையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவா் கொல்லப்பட்டாா். இது விடுதலைப் புலிகளின் தாக்குதல் என்று கூறப்பட்டாலும், ஸ்ரீலசுகட்சிக்குள் இருந்த அதிகார பதவி போட்டியே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பலா் கருதினா்.

ஜெயராஜ் பிரணாந்து புள்ளேயின் கொலை இடம்பெற்ற சிறிது நேரத்தில் அப்போதைய ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்த பசில் ராஜபக்ஷவின் பாதுகாப்பு வீரா்கள் இருவா், அதாவது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சோ்ந்த இருவா் அந்த பிரதேசத்தில் விபத்து ஒன்றில் சிக்கி மரணித்தாா்கள்.  ஜெயராஜ் பிரணாந்து புள்ளேயின் மரணத்திற்கும் இவ்விரு ஜனபதிபதி பாதுகாப்பு பிாிவு வீரா்கள் மரணத்திற்கும் தொடா்பிருப்பதாக அன்று பலா் நம்பினா் என்றும் சுதா்ஷனி பிரணாந்து புள்ளே கூறியிருக்கிறாா்.


Post a Comment

0 Comments