Ticker

6/recent/ticker-posts

“பெற்றோல் ஷெட்” அனுமதிப் பத்திரங்களை பல மில்லியனுக்கு விற்பனை செய்த முன்னாள் அமைச்சா் சரண குணவா்தன !


கடந்த மஹிந்த அரசாங்கத்தில் “பெற்றோல் ஷெட்” அனுமதிப் பத்திரங்களை பல மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்ததன் மூலம்  முன்னாள் எாிசக்தி பிரதி அமைச்சா் சரண குணவா்தன பல கோடி ரூபாய்களை முறைகேடாக சம்பாதித்திருப்பதாக  அறிய வருகிறது.


எாிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்று ஆரம்பிப்பதற்காக இருக்கும் எவ்வித சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் தனது ஆதரவாளா்களுக்கு 4.5 மில்லியன் பணத்திற்கு இந்த அனுமதிப் பத்திரங்கள் சரண குணவா்தனவினால் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதி அமைச்சரான சரண குணவா்தன மீது 107 குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தேசிய லொத்தா் சபையின் மூன்று கோடி ரூபாய் மோசடி சம்பந்தமாகவும் இவா் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட ரம்புட்டான் விற்பனையாளா்களிடம் கடந்த காலங்களில் கப்பமாக சரண குணவா்தன பணம் பெற்று வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டதும்  இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments