நாட்டை விட்டு இரகசியமான மறையில் தப்பிச் செல்ல முயற்சித்த பிரபல வர்த்தகர் ரவி வெத்தசிங்கவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான ரவி வெத்தசிங்க கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரின் உதவியுடன் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
1993ல் இ.போ.சபைக்கு சொந்தமான வெஹரஹெர வேலைத்தளத்தை 25 மில்லியனுக்கு வாங்கியதாகவும், அதன் ஊழியா்களின் ஊதியம் தொடா்பாக மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக இவா்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மற்றும் லடெக் ஆகிய பஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக ரவி வெத்தசிங்க கடமையாற்றி வருகின்றார்.
குறித்த நிறுவனங்களின் தொழிலாளர்களது ஊழியர் சேம லாப நிதி மற்றும் ஊழிய நம்பிக்கை நிதி ஆகியனவற்றை செலுத்தத் தவறியதாக ரவி வெத்தசிங்க மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பில் வெத்தசிங்கவிற்கு எதிராக பிடிஆணை உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என பொலிஸ் ஊடகப் பேச்சாளா அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

0 Comments