அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அரைவாசிப் பகுதி சீனாவிற்கு சொந்தமாகியுள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு முதலீடுகளே தேவைப்படுகின்றது. கடன் பெற்றுக் கொள்வதில் அர்த்தமில்லை.
கடந்த அரசாங்கம் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திற்கும் இடமளிக்கவில்லை. முடிந்தளவு கடன்களையே பெற்றுக்கொண்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடனை செலுத்த முடியாத காரணத்தினால், அரைவாசி துறைமுகம் சீனாவிற்கு சொந்தமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments