உமா ஓய திட்டம் குறித்து ஆராய்வதற்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் குழுவொன்று வருகை தரவுள்ளமையால், அவர்களின் அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மாணப்பணிகளை முன்னெடுக்கும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து எதிர்வரும் வாரம் ஈரானிலிருந்து தமது நிறுவனத்தின் குழுவொன்று வருகை தரவுள்ளதாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதியொருவர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் குறிப்பிட்டார்.
உமா ஒய திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக எமது பிராந்திய செய்தியாளர் அங்கு சென்றிருந்தார்.
இந்த பகுதியிலுள்ள பிரதான கிணறுகளில் நீர் வற்றியுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.
சில கிணறுகளில் நீர் முழுமையாக வற்றியுள்ளதுடன், சில கிணறுகளிலுள்ள நீரை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
பொரலந்த – வேரகம – மக்குல்எல்ல – ஏகொடகம – திக்அராவ ஆகிய பகுதிகளில் கிணறுகளில் நீரை பெற்றுக்கொண்ட மக்கள் இன்று பௌசர்களின் மூலம் நீரை பெற்றுக்கொள்ளும் நிலையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
இதனால் விவசாய நடவடிக்கைகளைக் கூட முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற பகுதியிலுள்ள கட்டடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளமையையும் காணக்கூடியதாக இருந்தது.

0 Comments