Ticker

6/recent/ticker-posts

நீதிமன்ற உத்தரவை மீறி பொருட்களை பகிர்ந்தளித்த தொண்டமான்:

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், நோர்வூட் மைதானத்தில் மக்களுக்கு ஒரு தொகை பொருட்களை பகிர்ந்தளித்த சந்தர்ப்பத்தில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பொருட்களை நீதிமன்றத்தினூடாக பொலிஸார் பொறுப்பேற்றிருந்தனர்.
எனினும், சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்ற உறுப்பினர்கள் இந்த பொருட்களை பகிர்ந்தளிக்க இன்று நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், அதனை தடை செய்யும் வகையில் ஹட்டன் பதில் நீதவான் தமயந்த பெர்ணான்டோவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அடிப்படையாக வைத்து பொலிஸார் தடை செய்தனர்.
எனினும், நேற்று தமக்கு இந்தப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான நீதிமன்ற உத்தரவு  வழங்கப்பட்டுள்ளதாக கூறி, முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் குறித்த பொருட்களை பகிர்ந்தளித்துள்ளார்.
பொலிஸாரின் உத்தரவை மீறி பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமையினால், பொருட்களைக் கொண்டு செல்ல முடியாத வகையில் பொலிஸார் விளையாட்டரங்கின் பிரதான நுழைவாயிலை மறித்துள்ளனர்.
அதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments