தமது சகோதரர்கள் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமது இளைய சகோதரர்களான யோசித மற்றும் ரோஹித ஆகியோர் அரசியல் ரீதியாக குரோத உணர்வுடன் பழிவாங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சகோதரர்கள் இருவரும் கடற்படை மற்றும் இராணுவம் ஆகிய ரக்பி அணிகளில் தலைவர்களாக கடமையாற்றி வந்ததாகவும் தற்போது அவர்கள் பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எந்தவிதமான காரணங்களும் அறிக்காது பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத்துறையில் குரோத உணர்வுடன் பழிவாங்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments