இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் 12வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பெண்கள் சமூகத்திற்கே முன் மாதிரியாக திகழ்ந்தவர் கல்பனா சாவ்லா. இவர் ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்னும் ஊரில் மார்ச் 17,1962ஆம் வருடம் பிறந்தவர் ஆவார்.
தனது சிறு வயதிலேயே விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக, வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பட்டத்தை முடித்தவுடன் அமெரிக்கா சென்றார். பின்னர் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.
கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். 2000 ஆம் ஆண்டில், கல்பனா கொலம்பியா விண்கலத்தில் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு காரணங்களால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் 2003ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று கொலம்பியா விண்கலத்தில் பயணித்தார். அதுவே அவரது கடைசிப் பயணமாக மாறியது.
விண்கலத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக வெடித்ததில் 2003ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி இறந்தார். அவரின் நினைவாக விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கிரகத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் பல்வேறு கட்டிடங்களுக்கும், தெருக்களுக்கும் அவரது பெயர் வைத்து கெளரவப்படுத்தப்பட்டது.

0 Comments